Connect with us

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பதிவு!! – பீதியில் பொதுமக்கள்..

Capture 13

செய்திகள்

இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பதிவு!! – பீதியில் பொதுமக்கள்..

ஆப்ரிக்கா நாட்டில் தோன்றிய குரங்கு அம்மையானது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 30 நாடுகளில் குரங்கு அம்மை நோய் மக்களை அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் முதல் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே உடலில் சொறி மற்றும் கொப்புளங்களுடன் இளைஞர் ஒருவர் கொல்கத்தா மருத்துவ மனையில் சந்தேகத்தில் பேரில் அனுமதித்துள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் அவரின் ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசாங்கம் கூறியுள்ளது.

இருப்பினும் பரிசோதனையின் முடிவுக்கு பின்னர் அவருக்கு எந்தவித பாதிப்பு என உறுதியாக கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இளைஞரின் உடல்நலம் குறித்து தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top