இந்தியாவிற்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய்!

5f345caf67860df43d003268d3712ea2

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய தீபா குமாரி மற்றும் பிரவீன் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் பதக்கத்தை உறுதி செய்தார். அவருக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்றுள்ளார். அவர் உஸ்பெகிஸ்தான் வீரர் 6 -4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment