இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம்.. எப்படி பயன்படுத்துவது?

ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் வசதி வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏடிஎம் மூலம் தற்போது தங்கத்தையும் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் ஹைதராபாத் நகரில் நிறுவப்பட்ட இருப்பதாகவும் இதில் வாடிக்கையாளர்கள் தங்கத்தை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

gold atm1 இந்த ஏடிஎம் உள்ளே சென்றவுடன் திரையில் அன்றைய நேரத்தின் தங்கத்தின் விலை குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 999 சதவிகித தூய்மையான சான்றளிக்கப்பட்ட தங்கத்தை நாணய வடிவில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0.5 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த ஏடிஎம்மில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனைத்து விதமான ஏடிஎம் கார்டுகள் மூலம் இந்த தங்கத்தை வாங்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

gold atmமேலும் தங்கத்தை வாங்கியவுடன் அதன் தூய்மை மற்றும் எடையை சரிபார்க்கும் சான்றிதழையும் பெற்று கொள்ளலாம் என்றும் தங்க ஏடிஎம் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் 3000 தங்க ஏடிஎம்களை அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம் என்றும் இந்த தங்க ஏடிஎம்மில் நிறுவிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.