Connect with us

இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டர்: பிரனவ் வெங்கடேஷ் தேர்வு!!

Pranav

தமிழகம்

இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டர்: பிரனவ் வெங்கடேஷ் தேர்வு!!

இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தின் பிரனவ் வெங்கடேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 14-வயதான பிரனவ் வெங்கடேஷ் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 9-வயதில் செஸ் விளையாட தொடங்கிய பிரனவ் வெங்கடேஷ் இந்தியாவின் முக்கிய செஸ் விளையாட்டு வீரராக இருப்பார் என ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மட்டும் 26 நபர்கள் கிராண்ட் மாஸ்டராக இருந்தனர்.

தற்போது நாட்டின் 75-வது கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தின் பிரனவ் வெங்கடேஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதே போல் சர்வதேசசெஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னையில்  நடைப்பெற்ற தேர்தலில் ஆர்காடி வோர்கோவிச் ஃபிடே தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது அணியில் ஆனந்த் தேர்வாகியுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top