இந்தியாவின் இசைக்குயிலின் உடல்நிலை கவலைக்கிடம்! மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு;
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தக் கொரோனாவானது பாகுபாடின்றி அனைவருக்கும் பரவிக்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக சினிமா துறை மத்தியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் இசைக்குயிலாக காணப்படுகிற லதா மங்கேஷ்கருக்கு கொரோனா உறுதியானது.
இதனால் அவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி கொண்டுவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் உறுதியளிக்கும் தகவலை கூறியுள்ளது.
அதன்படி பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் லதா மங்கேஷ்கருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை கூறியுள்ளது.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை கூறியுள்ளது. ஜனவரி எட்டாம் தேதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார்.
