அடி தூள்!! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய மகளிர் அணி!!

ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதி ஆட்டத்தில், இலங்கை மகளிர் அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1-ம் தேதி முதல் வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது.

இதனிடையே இன்று நடைப்பெற்ற போட்டியில் டாஸ்க் செய்து பேட்டிங் செய்த இலங்கை அணியானது 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதே சமயம் இந்தியா தரப்பில் ரேணுகாசிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று சாம்பியம் பட்டத்தை தட்டிச்சென்றது.

மேலும், இத்தகைய சாதனையால் 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...