Connect with us

அரையிறுதியில் மகளிர் அணி: ஒலிம்பிக்கில் மேலும் ஒரு பதக்கம் கிடைக்குமா?

Sports

அரையிறுதியில் மகளிர் அணி: ஒலிம்பிக்கில் மேலும் ஒரு பதக்கம் கிடைக்குமா?

cc453346dbd5a9c684d2ddfb98a85b24

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி நடை பெற்றது. இந்திய மகளிர் அணி வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகளும் ஆவேசமாக கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் 
இந்த நிலையில் முதல் பாதியில் இந்திய வீராங்கனைகள் ஒரு கோல் போட்ட நிலையில் கடைசி வரை இரு அணி வீரர்களும் கோல் போடவில்லை. இதனை அடுத்து இந்தியா ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது என்பதும் காலிறுதியில் இருந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

அரையிறுதியில் வெற்றி பெற்றால் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் வெண்கலப் பதக்கத்தை வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் ஒலிம்பிக்கில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top