நம்பவே முடியல; இந்தியனின் புதிய கேப்டன் பும்ராவா..!!அதிகாரப்பூர்வ அறிவிப்பு;

கிரிக்கெட் உலகில் இந்தியாவின் இடத்தை எந்த ஒரு நாடும் தொட முடியாது என்பது போல் தான் இந்தியா  காணப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக நல்ல ஒரு பார்மில் இருந்த இந்திய அணி தற்போது காணாமல் போய்விட்டது என்று கூறலாம்.

ஏனென்றால் இந்திய அணி ஒவ்வொரு ஆட்டத்திளையும் போராடிக் கொண்டுதான் உள்ளது. மேலும் வெற்றியானது அவ்வளவு எளிதாக அமையவில்லை. இந்தியாவின் புதிய கேப்டனாக தற்போது திகழ்கிறார் ரோஹித் சர்மா.

இவர் முதலில் 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக இருந்தார். தற்போது 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக திகழ்கிறார். இவருக்கு கடந்த வாரத்தில் கொரோனாவில் பாதிப்பு கண்டறியப்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது.

இதனால் அவர் தகுந்த பாதுகாப்பின் சூழலில் மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது .இதனால் இந்திய அணியை வழி நடத்தும் பொறுப்பு இளம் வீரர் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்தாண்டு நடைபெறாமல் இருந்து டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதன்படி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பிரம்மங்காமில் இன்று நடைபெறுகிறது.

கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்திய அணி கேப்டனாக பும்ரா அணியை நடத்துவார் என்று கூறியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.