லீட்ஸ் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி!!

3e63eca6a3cd45056ca648a077652739

தற்போது உலகில் உள்ள நாடுகளுக்கு சவால் கொடுக்கும் விதமாக வளர்ந்துள்ளது இந்தியா. மேலும் அதுவும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆனது பிற நாடுகளுக்கு மிகுந்த சவாலாக காணப்படுகிறது. அதுவும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலும் தனது பர்பாமன்ஸ் நிரூபித்துக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் உலக நாடுகள் மட்டுமின்றி அணியின் கேப்டன்களுக்கு மிகுந்த சவாலாக காணப்படுகிறது.2b2b86c2b42fc0653950ebdf087d5842

இந்த நிலையில் தற்போது இந்திய அணி ஆனது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் பலப்பரிட்சை மேற்கொண்டது .இதில் தற்போது இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவை சில நாட்களாகவே இந்திய அணியின் மிகுந்த போராட்டத்தில் இருந்தது தற்போது தோல்வியில் முடிந்தது.

அதன்படி லீட்ஸ் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. லீட்ஸ்ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வி அடைந்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் வலுவான நிலையில் இந்திய அணி நாலாவது நாளில் 278 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 91 ரன்களும், ரோகித் 59 ரன்களும், கோலி 55 ரன்களும், ஜடேஜா 30 ரன்கள் சேர்த்தனர்.

மேலும் இங்கிலாந்து அணி தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும், ஓவர்டன் 3 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதனால் இந்திய அணியானது தற்போது தோல்வியை தழுவியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி வெற்றியை பெற்றுள்ளது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment