இந்திய நாட்டின் நட்சத்திர தம்பதியாக மாறியவர்கள் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை அனுஷ்கா கர்ப்பம் தரித்திருந்த நிலையில், கணவர் விராட் கோலி பிரசவ கால விடுப்பு எடுத்து மனைவியை நன்கு கவனித்து வந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் கூட விராட் கலந்துகொள்ளவில்லை.
இருவரும் தங்கள் முதல் குழந்தையை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போது அனுஷ்காவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
— Virat Kohli (@imVkohli) January 11, 2021
null