Connect with us

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

rupeevsdollar 1617114722

செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி: என்னென்ன பாதிப்புகள் தெரியுமா?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவை சந்தித்துள்ளது.

இதனிடையே ரஷ்யா – உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அதே சமயம் கச்சா எண்ணெய் விலை வாங்குவதற்கு அதிக விலை இந்தியா கொடுக்கும் பட்சத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைவாசி உயர்ந்து இருப்பதால் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதாகவும், இதன் காரணமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்விச் செலவு கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top