Entertainment
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் இரங்கல் தகவல்!
நடிப்போடு மட்டுமின்றி சமூகத்திற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது படங்களில் காமெடி திறத்தை மட்டுமில்லாமல் கருத்தினையும் திணித்து இருப்பார் நடிகர் விவேக். சூப்பர் ஸ்டார் தொடங்கி இன்று இருக்கும் ஹரிஷ் கல்யாண் வரை பல்வேறு ரசிகர்களுடன் நடிகர்களுடன் இணைந்து நடித்து இருந்தார் என்பதும் அவரது நல்ல குணத்திற்கு சான்றாக உள்ளது. இந்நிலையில் அவர் சமூக சீர்திருத்த மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இருந்தார் என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். மேலும் தமிழகத்தில் இவரின் பெயரில் கோடிக்கணக்கான மரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நற்குணமுள்ள நடிகர் விவேக் தற்போது மரணம் அடைந்து அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. மேலும் பல தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் பலரை வேதனை அடைய செய்துள்ளதாகவும் அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் விவேக்கின் காமெடி நடிப்பும் வசன உச்சரிப்பும் மக்களை மகிழ்வித்தது என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் கூறியுள்ளார். படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் சமூகத்திற்காக குரல் கொடுத்தவர் நடிகர் விவேக் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விவேக்கின் குடும்பத்தினர் நண்பர்கள் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
