மாஸ்டர் பிளான் போடும் பிரசாந்த் கிஷோர்.. 2025-ல் நடக்கப் போகும் அதிரடி அரசியல் திருப்பம்..

இந்தியா இதற்கு முன் எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் ஒரு கார்ப்பரேட் ஸ்டைலை உருவாக்கி பிரச்சார உத்தியில், மக்களைக் கவர்வதில், கருத்துக்களை எடுத்துக் கூறி ஆட்சியைப் பிடிப்பதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

யார் இந்த பிரசாந்த் கிஷோர்? பீகார் மாநிலம், கோனார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர் பாண்டே ஐக்கிய நாடுகளின் சபை பொது சுகாதாரத் துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றினார். அரசியல் உலகில் இன்று பி.கே.என்று சொன்னால் அடிமட்டத் தொண்டனுக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்தியா முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க பின்புலமாக இருந்து செயல்படுத்தி வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.

குஜராத்தில் முதன் முதலாக 2011-ல் தனது அரசியல் பிரச்சார உத்தியை பாரதிய ஜனதா கட்சிக்காக பணியாற்றிய பி.கே. அந்தத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்து அரசியல் உலகில் யார் இவர் என்று கவனிக்க வைத்தார். தொடர்ந்து மற்ற கட்சிகளும் பி.கே-வை அழைக்க, ஜேடியூ , ஐஎன்சி , ஆம் ஆத்மி , ஒய்எஸ்ஆர்சிபி , திமுக மற்றும் டிஎம்சி ஆகிய கட்சிகளின் தேர்தல் வியூக நிபுணராகப் பணியாற்றினார்.

நாங்க போட்டியும் இல்ல.. ஆதரவும் இல்ல.. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இவரது பலமே சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களைக் கவர்வதுதான். கடந்த கால ஆட்சியின் குறைகள், செயல்படுத்தப்போகும் மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை கவர்ச்சிகரமாக வெளியிட்டு டிஜிட்டல் பிரச்சாரத்தின் நாயகனாக விளங்குகிறார். பி.கே.-வின் அரசியல் வியூகம் ஒரே ஒருமுறை மட்டும் உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றிய போது தோல்வியைத் தழுவியிருக்கிறது.

கடைசியாக 2021-ல் திமுக, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வெற்றி பெற வைத்துவிட்டு இனி இந்த அரசியல் வியூகராக பணியாற்றுவதிலிருந்து விலகி மற்ற பணிகளில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜன் சுராஜ் என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் மக்களைச் சந்திப்பது, நலத்திட்டங்கள் செய்வது போன்ற மக்கள் நலப்பணிகளைச் செய்து வந்த பி.கே. அடுத்து பீகாரில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டார். பீகாரில் வருகிற 2025-ல் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலுக்காக தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார். தற்போது இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரசாந்த் கிஷோர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews