பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் பெற்ற வெண்கல பதக்கம் திடீரென பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று காலை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் வினோத்குமார் மிக அபாரமாக வட்டு எறிந்து வெண்கல பதக்கம் பெற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது
இந்த நிலையில் போட்டிக்குப் பின்னர் நடந்த பரிசோதனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசோதனையில் வினோத்குமார் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக ஒலிம்பிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாரா ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய வீரரின் பதக்கம் பறிக்கப்பட்ட தகவல் ஒலிம்பிக் வீரர்கள் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது