
செய்திகள்
தொழில்நுட்ப கோளாறு: பாகிஸ்தானில் அவரசமாக தரையிறங்கிய இந்திய விமானம்!!!
இந்திய விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே விமான கோளாறு காரணமாக விபத்து மற்றும் மற்ற நாடுகளில் அவசரமாக தரையிறக்கப்பட்டது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஷார்ஜாவிலிருந்து ஹைதராபாத் வந்த இண்டிகோ விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும், கடந்த 2 வாரங்களில் 2-வது முறையாக இந்திய விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.
