கடிகாரத்தில் கேமிரா, கொரிய பெண்களிடம் பாலியல் உறவு.. சிட்னியில் இந்திய வம்சாவளி கைது..!

கொரிய நாட்டு பெண்களை போதைக்கு உள்ளாக்கி அவர்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தன்கர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் நிறைய கொரிய திரைப்படங்களை பார்க்கும் வழக்கத்தை கொண்டிருந்ததாக தெரிகிறது. கொரிய திரைப்படங்களில் பெண்கள் பாலியல் செய்யப்படும் காட்சிகளை பார்த்து அவருக்கு அந்த படத்தில் நடப்பது போல் உண்மையில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் சமூக வலைதளங்கள் மூலம் கொரிய பெண்களிடம் மட்டும் தொடர்பு கொண்டு அவர்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளார். அவர்களிடம் நைசாக பழகி அவர்களுக்கு போதை மருந்து பழக்கத்தை அறிமுகம் செய்து தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது கடிகாரத்தில் கேமரா வைத்து பாலியல் பலாத்காரம் செய்யும் அனைத்தையும் வீடியோவையும் எடுத்துள்ளதாக தெரிகிறது.

தன்கர் இதுவரை ஐந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் ஆறாவது பெண்ணுடன் தவறாக நடந்து கொள்ளும்போது அந்த பெண் சுதாரித்து தப்பித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆஸ்திரேலிய போலீசார் தன்கரை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவருடைய வீட்டை சோதனை செய்தபோது அவர் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் நூற்றுக்கணக்கான வீடியோக்களை இருப்பதை கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள் அனைவருமே சுயநினைவு இன்றி இருந்ததாக அந்த வீடியோவில் இருந்து பெரிய வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி அவர் பாலியல் பலாத்காரம் செய்த பெண்கள் அனைவருமே கொரிய பெண்கள் என்றும் தெரிய வருகிறது.

தன்கர் கொரிய திரைப்படங்களை பார்த்து ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு இருந்ததாகவும் டேட்டிங் இணையதளத்தில் பெண்களை சந்தித்து அவர்களை போதை பழக்கத்திற்கு அடிமைப்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொரிய சினிமா பார்த்து கொரியப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதில் வெறித்தனமாக இருந்தார் என்பதும் அவரது மனநிலையிலும் பல மாற்றங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தன்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.