இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு: 47 குண்டுகள் துளைக்கப்பட்டது கண்டுபிடிப்பு!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் விசைப்படகில் 47 குண்டு துளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகில் கடந்த 21-ஆம் தேதி 9 மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்துக்கு வந்த இந்திய கடற்படையினர் விசைப்படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

இந்நிலையில் படகு சென்றதன் காரணமாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் வீரவேல் என்ற மீனவர் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். தற்போது மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார்.

அதே சமயம் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது விசைப்படகில் 47 குண்டு துளைக்கப்பட்டதை கண்டறியப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? – தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்!!

மேலும், பாதிக்கப்பட்ட 9 மீனவர்களிடம் இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment