மக்களே உஷார் !! அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்ப அலை தீவிரமடையம்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துக்கொண்டு வந்தது. இதனால் அங்கு வாழும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த சூழலில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது.
இதனால் இன்று மட்டும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சிஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்த வெப்பநிலை முந்தைய நாட்களை விட 4, 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளது. இந்த சூழலில் அடுத்த 4-5 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலை தீவிரமாக வீசக்கூடும் என கூறியுள்ளது.
மேலும், இன்று காலை 8:30 மணிக்கு டெல்லியில் ஈரப்பதம் 39 சதவீதமாக இருந்ததாக குறிப்பிட்ட வானிலை மையம் டெல்லியின் காற்றின் தரம் ‘மோசமான’ பிரிவில் காற்றின் தர குறியீடு 271 என்ற அளவோடு இருப்பதாக கூறியுள்ளது. இதனால் அடுத்த 4-5 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
