இன்னும் 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: எச்சரிக்கை அறிவிப்பு

இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்றும் இந்த 7 மாவட்டங்களில் உள்ள நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது என்பதும் தற்போது மேலும் 7 மாவட்டங்களுக்கு இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அரபிக்கடல் மற்றும் வங்க கடல் ஆகிய பகுதிகளில் இரண்டு காற்றழுத்த தாழ்வு ஒரே நேரத்தில் தோன்றியுள்ளதை அடுத்தே 7 மாவட்டங்களுக்கு இந்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

imc 9

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment