இன்னும் ஒரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி தருமபுரி திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் இன்று சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment