அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படுமா?

வங்கக் கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வுகள் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் அவை தமிழக நோக்கி வருமா என்பதை வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்க கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

rainமேலும் லட்சத்தீவின் வடமேற்காக தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இது மேற்கு தென் மேற்கை நோக்கி நகர்ந்து செல்லும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் 17ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இன்று முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.