6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிற்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டதையடுத்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆறு மணி நேரமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த நகர்வும் இன்றி ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ஒரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.