வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகத்தை பாதிக்குமா?

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றுகிறது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து வருகிறது என்பதும் அதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இருப்பினும் இதுவரை தோன்றிய மூன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறவில்லை என்பது ஒரு ஆறுதலாக பொதுமக்களுக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த வாரம் தென்கிழக்கு அந்தமான் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் இந்த புயல் தமிழகத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

வங்கக் கடலில் தோன்றும் புயல் சின்னம் மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் வழியாக கரையை கடக்கும் என்பதால் அந்த மாநிலங்களில் மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழகம் ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை கடலோர மாவட்டங்களில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் குறித்து முழு விவரங்கள் தெரிய இன்னும் சில காலங்கள் ஆகும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment