Connect with us

41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

Sports

41 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

f15bbf69ea3c31d9754dc230e1fa7e23

இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளதை அடுத்து இந்திய அணி வீரர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிக அபாரமாக விளையாடி 5 கோல்கள் போட்டனர். ஜெர்மனி வீரர்களும் அடுத்தடுத்து கோல்கள் போட்டதை அடுத்து 4 கோல்கள் கிடைத்தது. இதனை அடுத்து இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது இந்தியாவுக்கு 3 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் என மொத்தம் நான்கு பக்கங்கள் கிடைத்துள்ளது. கடந்த 1980 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணி மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. அதனை அடுத்து 40 ஆண்டுகள் கழித்து இப்போது தான் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெண்கலம் வென்ற இந்திய அணி ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top