மீண்டும் பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்: இந்திய வீரர்கள் ஆசை!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்று உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமென இந்திய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள நிலையில் இன்று நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும். அதன்பிறகு இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

எனவே இன்று பாகிஸ்தானிடம் நியூசிலாந்து அணி தோற்றுவிட்டால் நியூசிலாந்து அணியை இந்தியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் திடீரென வங்கதேசம் ஏதாவது ஒரு அணிக்கு எதிராக விளையாடும் போது இன்ப அதிர்ச்சி கொடுத்தால் கணக்குகள் அனைத்தும் முற்றிலும் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் இன்று பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிராக போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் இந்திய ரசிகர்கள் வேண்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பாகிஸ்தான் சென்று விளையாட ஒப்புக்கொண்ட நியூசிலாந்து அணி அதன் பின்னர் திடீரென பின்வாங்கிஉச்தை அடுத்து பாகிஸ்தான் அதற்காக பழி வாங்க நேரிடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment