கடலூர் கடலில் தத்தளித்த 3 பேர்.. உடனடியாக கடலோர காவல்படை எடுத்த நடவடிக்கை!

கடலூர் கடலில் 3 பேர் தத்தளித்துக் கொண்டிருப்பதாக வெளியான செய்தி கேட்டதும் உடனடியாக கடலோர காவல் படை நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக கடலோர காவல் படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடலூரில் இருந்து 30 மைல் தொலைவில் சூறாவளியில் சிக்கி தவித்த மூன்று பேர்களை கடலோர காவல்படை மீட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் சூறாவளி காற்று வீசி இருந்தபோதிலும் கடலோர காவல்படை அந்த மூன்று பேர்களையும் ஹெலிகாப்டரில் சென்று மீட்டுள்ளனர்.

ந்த நிலையில் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மீன்பிடி படகுகள் கடலுக்குள் இருந்தால் உடனடியாக திருப்பி அனுப்பி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கடலோர கரை பாதுகாப்பு குழுவானது தயார் நிலையில் இருப்பதாகவும், எந்தவித சேதம் ஏற்பட்டாலும் மீட்பு பணிகளை கவனிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.