எல்லைப் பகுதியில் இந்திய பீரங்கிகள்!! மூன்றாம் உலகப் போரின் தொடக்கமா?

ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே பெரிய பிரச்சனையாக காணப்படுவது எல்லை பிரச்சனை தான். எல்லை பிரச்சினை விளைவாக பல போர்களும் உருவாகும். இவ்வாறு இருக்கையில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக காணப்படுவது சீனாவுடனான எல்லை பிரச்சினைதான். இந்தியா சீனா

இரு தரப்பும் சுமூகமான வாக்குவாதத்தை நடத்தினாலும் கூட அவ்வப்போது இந்தியாவினை சீண்டும் வகையில் சீனா செயல்படும். இதற்கு இந்தியாவும் தனது பலத்தை நிரூபிக்கும்.

அதனை போன்றுதான் தற்போது இந்தியா தனது பலத்தை நிரூபிக்கும் வண்ணத்தில் பீரங்கிகளை எல்லைப்பகுதியில் நிறுத்தியுள்ளது.  அருணாச்சலில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே பீரங்கிகளை இந்திய ராணுவம் குவித்து வைத்துள்ளது.

தவாங் பகுதியில் இந்தியா-சீனா இடையே கடும் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இவ்வாறு இந்தியா பீரங்கிகளை குவித்து வைத்துள்ளது. முன்னதாக இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா அருணாச்சல் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்து இருந்தது.

அதனை திருப்பி அடிக்கும் வண்ணமாக சீனாவின் ஆட்சேபித்து கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய ராணுவம் தரப்பில் பீரங்கிகள் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment