கமல்ஹாசன் நடித்த வெற்றி திரைப்படமான “இந்தியன்” திரைப்படம் 1996 இல் வெளியாகி மாஸான வெற்றி பெற்றது ,அதை தொடர்ந்து 26 ஆண்டுகள் கழித்து படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2020 இல் தொடங்கப்பட்டது, படப்பிடிப்பில் விபத்து ஏற்பட மேலும் கொரானா காரணமாக தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
இப்போது அது இந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு பூஜை போடப்பட்டுள்ளது. அதே போல் படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ,பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை ‘இந்தியன்-2’ படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘அவர் திரும்ப வந்துவிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் முதல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிம்புவின் பாத்து தல படத்தில் கெளதம் மேனன் கெட்டவரா? வெளியான கலக்கல் அப்டேட் !
இந்தியன் படத்தில் நடிகர் விவேக்கிற்கு பதிலாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு முன் விவேக் நடித்த காட்சிகளை எல்லாம் மீண்டும் ஷங்கர் படமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
தற்போது கிடைத்த தகவல்களின்படி குரு சோமசுந்தரம் தான் அந்த ரோலில் நடிக்க போகிறாராம். தற்போது சென்னையில் கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்படுகிறது. கமல் வந்ததும் அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகிறது. படத்தை 2023 பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் இலக்கில் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.