இந்தியன் 2 படப்பிடிப்பு: பூஜை போட்ட இயக்குநர் ஷங்கர்!!

கமல் ஹாசன் நடிப்பில் 90களில் வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்துக்கு சுஜாதா கதை வசனம் எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவிருக்கிறார்கள்.

Capture 54

இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலும் கமல் ஹாசனே நாயகனாக நடிக்கிறார். கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த நேரத்தில் இந்தப் படம் அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு கமல் ஹாசன் தனது அரசியல் பிரச்சாரத்தில் தீவிரமாகிவிட்டார்.இந்த நிலையில் நின்று போயிருக்கும் தனது சினிமா பிராஜெக்டுகளையும் முடித்துவிடும் வேலைகளில் தீவிரமாக உள்ளார்.

Capture 55

 

அதன் படி, விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்ட நிலையில்  இன்றையதினத்தில் பூஜை  போடப்பட்டுள்ளது. அதே போல்  படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Capture 56

தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இத்தகைய புகைப்படமானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Capture 57

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment