இந்தியன் 2 செகண்ட் சிங்கிள் ‘நீலோற்பம்’ எப்போ ரிலீஸ் தெரியுமா?..

1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “நீலோற்பம்” பாடல் நாளை வெளியாகிறது.

இந்தியன் 2 செகண்ட் சிங்கிள்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் பல படங்களில் நடித்து வருகிறார்.பிரபாஸின் கல்கி 2898 AD படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இப்படம் ஜுன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதை தொடர்ந்து, கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் சிலம்பரசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து, தயாரிப்பு பணியிலும் பிஸியாக இருந்து வருகிறார் கமல்ஹாசன்.

ராஜ் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படமாக உருவாக்கியிருக்கின்றனர். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ள இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சென்ற வாரம் முதல் சிங்கிளாக பாரா வெளியிடப்பட்டது. இப்படத்தில் சிந்தார்த், எஸ்.ஜெ.சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தியன் 2 தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தியன் 2 கதை:

இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜுன் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த், மனிரத்னம், சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்களுடன் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியன் படத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் கழித்து ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஊழலுக்கு எதிரான ஒரு சமூக செய்தியை மீண்டும் வழங்க உள்ளனர்.

இந்நிலையில், இரண்டாவது சிங்கிளாக “நீலோற்பம் நீரில் இல்லை” பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது. கவிஞர் தாமரை வரிகளில் அனிருத் இசையில் இப்பாடல் உருவாகி உள்ளது. அந்த பாடலின் இரண்டு வரிகளை மட்டும் படக்குழு வெளியிட்டிருக்கும் நிலையில் நாளை 11 மணி அளவில் முழு பாடலையும் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங்கின் ரொமாண்டிக் பாடலாக இந்த பாடல் வெளியாக உள்ளது. இந்தியன் தாத்தா இறந்து விட்டார் என நினைக்கும் சந்துருவின் மகன் சித்தார்த் ஊழலுக்கு எதிராக போராடுவதும் அவருக்கு இக்கட்டான நேரத்தில் உதவ இந்தியாவுக்கு மீண்டும் சேனாபதி வருவது தான் படத்தின் கதை எனக் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...