இந்தியன் 2 படத்திலிருந்து அந்த வசனங்களை தூக்கிய ஷங்கர்.. அதுதான் காரணமா ?

உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார் கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ARR இசையில் கமலின் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக கடந்த 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது

2018 ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அதைத்தொடர்ந்து சங்கர் தெலுங்கு படத்தை இயக்க செல்ல கமல் அரசியல் டிவி நிகழ்ச்சிகள் பிஸி ஆக படம் கைவிடப்பட்டதாக ரசிகர்கள் எண்ணிய நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் படத்தை துவங்கும் என உறுதியளித்தார்

indian 2 444 1

அதைப்போலவே பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இந்த படத்தின் மைய கதையே அரசு துறைகளில் நடக்கும் குற்றங்களை வெளியே கொண்டு வருவது தான்.

குந்தவையாக த்ரிஷாவின் நடிப்பிற்கு குரல் கொடுத்தவர் யாரு தெரியுமா?

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி அதில் இடம்பெற்ற அரசியல் வசனங்களை நீக்கி விட்டதாக தகவல் வந்துள்ளது. ஆரம்பத்தில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றதாகவும் அதன்பின் உதயநிதி படத்தை வாங்கிய பிறகு குறிப்பிட்ட சில அரசியல் வசனங்களை நீக்கி விட்டதாகவும் தகவல் வந்துள்ளது

இது எந்த அளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தான் தெரியவரும்.மேலும் படத்தில் குல்ஷன் குரோவர், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ் மற்றும் வெண்ணெலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment