Connect with us

’இந்தியன் 2’ நிவாரணத் தொகையில் சிக்கல்: பஞ்சாயத்து செய்த ஷங்கர்

Entertainment

’இந்தியன் 2’ நிவாரணத் தொகையில் சிக்கல்: பஞ்சாயத்து செய்த ஷங்கர்

சமீபத்தில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போது விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே

ஷங்கர், கமலஹாசன் மற்றும் லைக்கா நிறுவன அதிகாரிகள் இணைந்து இந்த நிவாரண உதவியை ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றில் விபத்தில் மரணம் அடைந்த குடும்பத்தினர்களுக்கு கொடுத்தனர்

இந்த நிலையில் இந்த நிவாரணத் தொகையை பெற்றவர்களில் ஒருவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களின் மருமகன் கிருஷ்ணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை பிரிப்பதில் கிருஷ்ணாவின் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. கிருஷ்ணாவின் தந்தை குடும்பத்தினர்களும், மனைவி குடும்பத்தினர்களும் மொத்த பணமும் வேண்டும் என்று கூற இதனால் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் இதில் தலையிட்டு கிருஷ்ணாவின் தந்தை குடும்பத்திற்கு 40 சதவிகிதமும், கிருஷ்ணாவின் மனைவி குடும்பத்திற்கு 60 சதவிகிதமும் பிரித்து நிவாரணத்தொகை வழங்க ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top