இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச்சில் நடக்கப்போவது இதுதான்…! இவ்ளோ பிரபலங்கள் வாராங்களா..?

இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று (1.6.2024) மாலை 6 மணிக்கு சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழே படத்தில் வரும் கத்தியைக் கொண்டு அதன் உறையையும் வைத்து மிக வித்தியாசமான முறையில் வடிவமைத்து இருக்கிறார்கள்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளன. பாரா, காலண்டர் சாங், நீலோற்பம், ஷகாஷகா, கம்பேக் இண்டியன், காதராழ் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அனிருத்தின் இசை மிகவும் வெரைட்டியாக வந்துள்ளது. இவற்றில் 2 பாடல்கள் பர்ஸ்ட், செகணட் சிங்கிள்களாக வந்துவிட்டன. இந்த விழாவில் சிம்பு, ராம்சரண், ரன்வீர் சிங், சித்தார்த், மோகன்லால், சிரஞ்சீவி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஷங்கரைப் பொருத்தவரை ஆடியோ லாஞ்சை வெளிநாட்டில் தான் பிரம்மாண்டமாக வைப்பார். ஆனால் இந்த முறை அவர் ரொம்ப பிசி. அடுத்து கேம் சேஞ்சர் படத்திற்கான வேலைகளிலும் மும்முரமாக உள்ளார். அதனால் சென்னையிலேயே வைத்து விட்டார். அதே போல தான் உலகநாயகன் கமலுக்கும் தக் லைஃப் படத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெறுவதால் உள்ளூரிலேயே வைத்தது வசதியாகி விட்டது.

கடைசியாக எந்திரன் படம் மலேசியா, 2.Oபடத்திற்கு துபாய் போன்ற வெளிநாடுகளில் ஆடியோ லாஞ்சை நடத்தினார். தசாவதாரம் படத்துக்கு ஜாக்கிஷான், ஐ படத்துக்கு அர்னால்டு என ஹாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து ஆடியோ லாஞ்சை இயக்குனர் ஷங்கர் தெறிக்க விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலும், ஷங்கரும் தக் லைஃப், கேம் சேஞ்சர் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் சென்னையிலேயே வைத்து விட்டார்கள். படத்திற்கான ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கி உள்ளது.

Indian 2
Indian 2

கமலும், ஷங்கரும் கஷ்டப்பட்டு எப்படி இந்தியன் 2 எடுத்தாங்க என்பதற்கான முன்னோட்டமாகவும் இந்த ஆடியோ லாஞ்ச் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் பாரா பாடலை மேடையிலேயே அனிருத் பாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் முதல் பாகத்தின் வீடியோவையும் இந்த விழாவில் போடப் போகிறார்களாம். இந்தியன் 2 படம் உருவானதன் பின்னணிக்கான வீடியோவும் இந்த விழாவில் போடப் போகிறார்களாம். இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் வரப்போகிறார் என்றது வதந்தி தான்.

ஆனால் டான்ஸ் பண்ணும் கலைஞர்கள் இந்தியன் தாத்தா கெட்டப்பைப் போட்டு வருவார்கள். நேரடி ஒளிபரப்பு கிடையாதாம். ஜூன் மாதம் கடைசியில் இந்த ஆடியோ லாஞ்சை கலைஞர் டிவியில் ஒளிபரப்புவார்களாம். படத்திற்கான சில கிளிம்ப்ஸ் வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தோட டிரைலரை வெளியிட வாய்ப்பு இல்லை. அது தனிவிழாவாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...