கேப்டன் ரோகித் சர்மா அரை சதம்; 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.!!!

இந்தியா இன்றைய தினம் இங்கிலாந்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியினை மேற்கொண்டு வருகிறது. ஏனென்றால் தற்போது இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் உள்ளன.

ஏற்கனவே மூன்று 20 ஓவர் போட்டிகள் நடந்து முடிந்து, அந்த தொடரை இந்தியா வெற்றிகரமாக வென்றது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியான இன்றைய ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் காட்டினர்.

அதிலும் குறிப்பாக நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா ஆறு விக்கெட்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் இங்கிலாந்து வீரர்கள் 110 ரன்கள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர்.

இந்த சிறிய இலக்கை மிகவும் சுலபமாக நம் அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் எதிர்கொண்டு விளையாடிக் கொண்டு வருகின்றனர். அதிலும் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடிஅரை சதத்தை  கடந்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தந்துள்ளார். மேலும் இந்த போட்டியில் எந்த ஒரு விக்கெட்டையும் இழக்காமல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.