டேபிள் டென்னிஸ் போட்டி- இந்தியா அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது காமன்வெல்த் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பங்களிப்பானது எந்த முறையும் இல்லாத வகையில் தற்போது காணப்படுகிறது.

ஏனென்றால் இந்தியா தினம் தோறும் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளியணை வரிசையாக பெற்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர்.

நேற்றைய தினம் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவினர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். இதனால் இந்தியாவிற்கு மற்றும் ஒரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதியானது.

இந்த நிலையில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி முடிவுகளும் தற்போது கிடைத்துள்ளது. இதில் இந்தியா அபாரமாக விளையாடி தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் மற்றும் சத்திய ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.