இலங்கையை போன்று விரைவில் இந்தியாவும் மாறும்: பின்னணி என்ன ?
இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பெரும் பொருளாதர நெருக்கடி நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் பிச்சை எடுக்க கூடிய வறுமையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய அரசின் பல்வேறு துறை செயலர்களுடன் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலர் பி.கே.மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா போன்ற பல்வேறு துறைச்செயலர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தியாவில் புதிய திட்டங்களை கொண்டுவராமல் இருப்பதால் வறுமை உருவாகிறது என்ற காரணத்தை கூறிக்கொண்டே இருக்காமல் பொருளாதரத்தை முன்னேற்றுவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட ஜனரஞ்சகமான சில திட்டங்கள் இந்திய நாட்டின் பொருளாதரத்தின் அடிப்படையில் நீடிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த திட்டங்களை மேலும் நீட்டிக்க முயன்றால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடியினை போன்று இந்தியாவிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக பல்வேறு துறைச் செயலர்கள் பிரதமரிடன் கூறியுள்ளனர்.
