இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற வங்கதேசம் அதிரடி முடிவு!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி திரில் வெற்றி பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்றது. இதனை அடுத்து அந்த அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

ind vs bang1இதனை அடுத்து சற்று முன்னர் பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டு வருகின்றன. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்த வங்கதேசம் அதன்பிறகு பத்தாவது மற்றும் 14வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தற்போது 14வது ஓவரில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியை பொறுத்தவரை இரண்டு விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.