இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: 2 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

1bb28ec09b23a1b35d06320c994f3eb1-1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இளம் வீரர்கள் 2 பேர் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25 ஆம் தேதியும், நான்காவது டெஸ்ட் போட்டியாக செப்டம்பர் 2-ஆம் தேதியும், 5வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10-ஆம் தேதியும் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்விஷா ஆகிய இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு விபரம் இதோ: இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இதோ: ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், சாஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment