காமன்வெல்த்: புள்ளி பட்டியலில் சரிவு, ஏழாவது இடத்திற்கு சென்ற இந்தியா!!

நம் தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா எந்த ஒரு முறையும் இல்லாத வகையில் தற்போது அதிரடியை காட்டிக் கொண்டு வருகிறது.

ஏனென்றால் பளு தூக்குதல் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி தொடர்ந்து கிடைத்துக் கொண்டு வந்தது. இதனால் புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஆறாவது இடத்தில் நிலவிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நீளம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் வென்றார்.

நீளம் தாண்டுதல் இறுதி போட்டியில் 8.08 மீட்டர் நீளம் தாண்டி முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் வென்றார். இந்தியா ஆறு தங்கம், ஏழு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களும் பெற்றுள்ளது. இருப்பினும் கூட ஏழாவது இடத்திற்கு இந்தியா இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...