2025ல் 100 கோடி பேர் ஆன்லைனில் இருப்பார்கள்: கூகுள் இந்தியா தலைவர் கணிப்பு

வரும் 2025ம் ஆண்டுக்குள் 100 கோடி இந்தியர்கள் ஆன்லைனில் இருப்பார்கள் என கூகுள் இந்தியா தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே மிக அதிகமாக இன்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை பிரதமர் மோடி ஆரம்பித்ததிலிருந்து ஆன்லைனில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக பண பரிமாற்றத்தை தற்போது ஆன்லைனில் தான் அதிகம் நபர்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

googleஇந்த நிலையில் இன்று நடைபெற்ற கூகுள் இந்தியா கூட்டத்தில் பேசிய கூகுள் இந்தியா தலைவர் சஞ்சய் குப்தா இந்தியாவில் வரும் 2025ம் ஆண்டுக்குள் 100 கோடி இந்தியர்கள் ஆன்லைனில் இருப்பார்கள் என்றும் தற்போது 700 கோடி இந்தியர்கள் இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு இன்டர்நெட்டை பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக இது சாத்தியம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக மக்கள் தொகை சுமார் 800 கோடி என்று கூறப்படும் நிலையில் அதில் 100 கோடி இந்தியர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துவார்கள் என்ற கணிப்பு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.