
செய்திகள்
கச்சத்தீவை இந்தியா மீட்பதற்கு வாய்ப்பிலை ராசா!!- டக்ளஸ் தேவானந்தா..
கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இது சாத்தியமற்றது என இலங்கை கடற் தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
மன்னார் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கடல் அட்டை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கடல் அட்டை சார் தொழில்களில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழக மக்கள் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்ததின் காரணமாக அவர் கச்சதீவை மீட்க இதுவே சரியான நேரம் என கருத்துத் தெரிவித்து இருக்கலாம் என கூறினார்.
இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அதனை பிரதமர் மோடி தெரிவித்திருப்பார் என்று கூறியுள்ளார். கச்சத்தீவு தொடர்பாக யாருக்கு அதிக லாபம் கிடைக்கிறது என்பது பாரத ஜனநாயக கட்சிக்கு தெரியும் என்றும் இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் எழுத இருப்பதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
