ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா சொதப்பல்: பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் மட்டுமே இலக்கு!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இந்தியா களமிறங்கி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆனதை அடுத்து விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே பொறுப்புடன் ஆடினார்கள்

அதன்பின் வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே சொதப்பியதன் காரணமாக 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது இந்த நிலையில் 152 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி முதல் ஓவரிலேயே 10 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.