ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா….. சீனாவை வீழ்த்தி கெத்து காட்டும் இந்தியா……

உலகில் எத்தனை நாடுகள் இருந்தாலும் இந்தியா என்றாலே தனி பெருமை தான். கலாச்சாரம் பாரம்பரியம் குடும்ப வாழ்க்கை முறை விவசாயம் என அனைத்து விதத்திலும் இந்தியாவிற்கு இணையாக வேறு எந்த நாடும் இருக்க முடியாது என நாம் பெருமையாக மார்தட்டி கூறலாம்.

மற்ற நாடுகளில் எல்லாம் திருமணம் என்பது வெறும் சுப நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் திருமண சடங்கை பாரம்பரியம் மாறாமல் கலாச்சார முறைப்படி முறலயாக செய்து வருகிறார்கள். நம் முன்னோர்கள் சொல்லி தந்த பண்பாட்டை தற்போது வரை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்தியா சீனா

பண்பாடு மட்டுமல்ல பாதுகாப்பும் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. இராணுவமும் காவல்துறையும் மக்களின் நலனுக்காக அயராமல் உழைக்கிறார்கள். இந்நிலையில் ஆசிய கண்டத்திலேயே சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4 வது நாடாக உள்ளதாம்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நிறுவனமான லோவி நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பிற்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் சீனா மற்றும் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், நிதி அமைப்பு மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது சீனா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் இந்தியாவோ ராணுவம், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட செல்வாக்கினால் 4ஆவது இடத்தை பிடித்து “பவர் ஃபுல்” நாடாக விளங்குவதாக லோவி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment