இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் கொரோனாவின் டெல்டா தொற்றிலிருந்து உருமாறிய ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது.

தமிழ்நாட்டிலும் இந்த கொரோனா ஓமிக்ரான் தொற்று பரவி இருந்தாலும் அதிக பாதிப்பு இல்லை 179 பேர் ஓமிக்ரானால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் பெரிய பாதிப்புகள் இல்லை.

ஆனால் இந்திய அளவில் இந்த கொரோனாவின் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு தினசரி 4000 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒமிக்ரான் தொற்றிலிருந்து 1552 பேர் குணமடைந்த நிலையில் 2481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment