பலம் வாய்ந்த நியூசிலாந்துடன் பலப்பரிட்சை; இன்று முதல் ஒரு நாள் போட்டி!

இந்த ஆண்டு 50 ஓவர்கான உலககோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி திடீரென்று தனது பழைய ஃபார்முக்கு திரும்பி உள்ளது ரசிகர்களிடையே மிகவும் கொண்டாட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி 4 ஒரு நாள் போட்டிகளில் மூன்று சதம் அடித்து விலாசி தனது ரன் மிஷின் என்ற பெயரை திரும்ப பெற்றுள்ளார். இது ரசிகர்களிடம் மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஏனென்றால் கடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி இரண்டு தொடரையும் கைப்பற்றியது .இவ்வாறு உள்ள நிலையில் இந்தியாவிற்கு 50 ஒரு ஓவர் போட்டியில் மிகவும் சவாலளிக்கும் அணியாக காணப்படுகிறது நியூசிலாந்த அணி.

ஏனென்றால் உலகக்கோப்பை வரலாற்றில் தொடர்ந்து பலமுறை இந்தியா நியூசிலாந்து அணியிடம் அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிஉடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற உள்ளது.

இதன் மத்தியில் இன்றைய தினம் நியூசிலாந்த அணி இந்திய அணி உடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து தொடங்குகிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் பகல், இரவு போட்டியாக மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் இந்த ஒரு நாள் போட்டியில்  பேட்ஸ்மேன்களில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்பின் பவுலர்களிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்றும் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.