
News
இந்தியா செய்யப்போகிற புதிய சாதனை? அதுவும் ‘200 கோடியாம்’..!!
2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆயினும் இந்திய அரசு பல்வேறு விதமான கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி கட்டுப்படுத்தியது. மேலும் அதற்கு பெரும் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது தடுப்பூசி தான்.
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர் என்று அறிவிக்கப்பட்டது. இது உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் வியக்க வைத்ததாக காணப்பட்டது.
ஏனென்றால் குறுகிய காலத்திலேயே இந்தியா இத்தகைய சாதனையை செய்துள்ளது. இதன் விளைவாக தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.
அதிலும் நம் தமிழகத்தில் வாராவாரம் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியினை செலுத்திக் கொண்டனர். இந்த நிலையில் இந்தியா தற்போது 200 கோடி தடுப்பூசி செலுத்தி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை நெருங்கி உள்ளதாக காணப்படுகிறது.
அதன்படி நாடு முழுவதும் தற்போது செலுத்தியவர்கள் எண்ணிக்கை 193.13 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் இந்தியாவின் இந்த சாதனையை வியப்போடு பார்க்கிறது.
