அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. முதல் டெஸ்ட் போட்டியின் ஸ்கோர் விபரம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று இருநாடுகளின் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

கே.எல்.ரகௌல் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், சுப்மன் கில் 20 ரன்கள் எடுத்த நிலையிலும் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன் பின்னர் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 5 பந்துகளை சந்தித்து ஒரு ரன்னில் அவுட்டாகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ind vs bang test1இந்த நிலையில் உணவு இடைவேளையில் இந்தியா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வரும் நிலையில் தற்போது புஜாரா மற்றும் ரிஷப் பண்ட்ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன் வரை இந்திய அணி 26 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலையில் இந்திய அணி விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இனிவரும் பேட்ஸ்மேன்கள் சுதாரித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.