பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்தியா: பேட்டிங், பவுலிங்கில் சொதப்பல்!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. பேட்டிங் பௌலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சொதப்பியதே இன்றைய தோல்வியின் காரணம் என்று கூறப்படுகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்தநிலையில் 152 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் பாபர் அசாம் 67 ரன்களும் முஹம்மது ரிஸ்வான் 79 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக அபாரமாக பந்துவீசிய அப்ரிடி இன்று ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது இல்லை என்ற சாதனையும் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விராத் கோலி விக்கெட்டை இழந்தது இல்லை சாதனையும் இன்று முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print