272 ரன்கள் இலக்கு, 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இந்தியா.. மீண்டும் தோல்வியா?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி 271 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணி ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த நிலையில் மிராஜ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தால் அந்த அணி 271 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில் தற்போது இந்திய அணி 272 ரன்கள் என்ற இலக்கில் பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் தவான் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகினர். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே எல் ராகுல் அவுட்டாகி விட தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் அக்சர் பட்டேல் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

நான்கு முக்கிய விக்கெட்டுகள் விழுந்து விட்ட நிலையில் இன்னும் 207 ரன்கள் எடுக்க வேண்டியிருப்பதால் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடையவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியிடம் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இந்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...