Connect with us

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி!

Sports

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி!

59cce4d2c9cd8315248e6ae7320d87ad

ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் சற்று முன்னர் இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் 5-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி இந்தியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது 

இந்த போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய போட்டியில் ஆரம்பத்தில் இரண்டு கோல்கள் அடுத்தடுத்து போட்டு இந்திய அணி முன்னிலையில் இருந்தாலும் நான்காவது கால் இறுதிப் பகுதியில் கிடைத்த பெனால்டி கார்னர்களை பெல்ஜியம் சரியாக பயன்படுத்தி கோல்களாக மாற்றியது. இதனை அடுத்து அந்த அணிக்கு அடுத்தடுத்து 3 கோல்கள் கிடைத்ததால் இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் தோல்வி வரும் அணியுடன் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top